» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் : புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும்!
புதன் 7, டிசம்பர் 2022 5:42:36 PM (IST)
வங்கக்கடலில் உருவாகும் "மாண்டஸ் புயல்" புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 770 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புதிய புயலுக்கு மாண்டஸ் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இன்று மாலை புயல் சின்னமாக வலுவடைந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும்.
தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக சென்னையில் 9 மற்றும் 10ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் 3 துறைமுகங்களில் 4, 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை துறைமுகத்தில் 4 மற்றும் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யூபிஎஸ்சி தேர்வில் முதலிடம்: முதல்வர் பெருமிதம்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 5:09:46 PM (IST)

ஊரக வளர்ச்சி முகமையில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:51:50 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்புக்கூட்டம்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:17:05 PM (IST)

எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் : ராமதாஸ் அறிக்கை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:01:46 PM (IST)

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவடுக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:51:37 PM (IST)

சுனாமி குடியிருப்பு பகுதிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:40:19 PM (IST)
