» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈபிஎஸ் ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது: திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்!

புதன் 7, டிசம்பர் 2022 12:35:02 PM (IST)"நான்கரை ஆண்டு ஈபிஎஸ் ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது" என திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார். இதன்பிறகு இன்று (நவ.7) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "நான்கரை ஆண்டு ஈபிஎஸ் ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது. அதிமுக கட்சி தற்போது கம்பெனியாகி விட்டது. அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 14 வயதில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்ட நான் மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். தமிழக மக்கள் நலன் கருதி திமுகவில் இணைந்துள்ளேன். இலவச மின்சாரம் மூலம் விவசாயிகள் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றி வைத்துள்ளார். சமூக நீதி பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செயல்பட வந்துள்ளேன்" இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory