» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு

செவ்வாய் 29, நவம்பர் 2022 5:11:26 PM (IST)ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிஃப்டில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கைசிறப்பு மற்றும் அறுவை சிகிச்சைச் துறை கட்டடத்திற்கு வருகை தந்தார். ஒவ்வொறு நிகழ்ச்சியாக துவக்கி வைத்துவிட்டு கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டுவிட்டு மூன்றாவது தளத்திலிருந்து தரைத் தளத்திற்கு லிஃப்டில் சென்றபோது எதிர்பாராத விதமாக லிஃப்டின் இயக்கம் தடைப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள், லிஃப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் லிஃப்டின் ஆபத்துக் கால கதவின் வழியே வெளியேறினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory