» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் பள்ளி பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை!!

செவ்வாய் 29, நவம்பர் 2022 4:20:21 PM (IST)தக்கலை அருகே தனியார் பள்ளி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயம் அடைந்த 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேர்கிளம்பியில் டிரினிட்டி சி.பி.எஸ்.இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ப்ரிகேஜ் முதல் பிளஸ்-2 வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வர பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை சுவாமியார் மடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை அழைத்து வர பஸ் ஒன்று சென்றது. பஸ்சை டிரைவர் ஆண்டனி மைக்கேல் ஓட்டினார். அந்த பஸ்சில் சாரதா என்ற பாதுகாவலரும் 2 பள்ளி குழந்தைகளும் இருந்தனர். சுவாமியார்மடம் அருகே உள்ள பட்டணம் கால்வாய் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்தது.

அதில் இருந்த குழந்தைகள் உள்பட 4 பேரும் உதவி கேட்டு கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் கால்வாயில் கவிழ்ந்த பஸ்சில் சிக்கிய 2 குழந்தைகள், டிரைவர் மற்றும் பாதுகாவலரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த 2 பள்ளி குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory