» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொள்ளாச்சியில் 16 இடங்களில் குண்டு வீசப்படும் : மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு...!

வியாழன் 29, செப்டம்பர் 2022 11:57:35 AM (IST)

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் அனுப்பிய மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

தற்போது, இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். 

இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மர்மநபர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் கோவை மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வருகின்றது. தற்போது பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory