» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வ‌ர் ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்: பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது

வியாழன் 22, செப்டம்பர் 2022 12:36:55 PM (IST)

முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி பல்வேறு தெருக்களில் முதல்-அமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், முதல்-அமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

kumarSep 22, 2022 - 01:30:00 PM | Posted IP 162.1*****

ethirthu kelvikeppavargalai ellam ippadi kaythu seythukonde irungal.... engae sendru mudiyapogiratho ithu.....

SIVASep 22, 2022 - 12:48:33 PM | Posted IP 162.1*****

ஏன் போஸ்டர் எல்லாம் தேவைப்படுமென்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் முதல்வரை படாதபாடு படுத்துகிறார்கள். வடிவேலு இல்லாத குறையை தீர்த்துவைக்கிறார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital









Thoothukudi Business Directory