» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசியக் கொடியில் சர்ச்சைக்குரிய வாசகம் : தனியார் பள்ளி ஆசிரியர் கைது!

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:37:22 PM (IST)



தாராபுரத்தில் தேசியக் கொடியில் சர்ச்சைக்குரிய வாசகம் எழுதிய விவகாரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (36). இவர் தாராபுரத்தில் உள்ள  தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.

அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசியக் கொடியில்  இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் என சர்ச்சைக்குரிய வாசகம் எழுதி தேசியக் கொடியை தனது வீட்டின் மொட்டைமாடியில்  கட்டி இந்திய தேசிய மூவர்ணக் கொடியை பறக்க விட்டார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தாராபுரம் போலீசில் தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் மணிகண்டன் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதன் பின்னர் ஆசிரியர் எபினை தேசியக்கொடி அவமதிப்பு குறித்த வழக்கில் கைது செய்ய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory