» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:27:53 PM (IST)
ஆலங்குளம் அருகே, விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பிரபு. இவருடைய மனைவி செல்வராணி எஸ்தர் (வயது 50). இவர் ஆலங்குளத்தை அடுத்த கோவிலூற்றில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி செய்து வந்தார். இவருடைய மகள் வர்ஷினி சமீபத்தில் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.
மகளின் நினைவாகவே இருந்து வந்த செல்வராணி எஸ்தர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் வந்து அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வராணி எஸ்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியாா் வங்கி கொள்ளை வழக்கில் 5பேர் கைது: 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:13:12 AM (IST)

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:55:26 AM (IST)

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது : பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:36:44 AM (IST)

பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை: அமைச்சர் திட்டவட்டம்...!
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 5:28:48 PM (IST)

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:33:04 AM (IST)

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் குளத்தில் குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:28:53 AM (IST)
