» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

வியாழன் 23, ஜூன் 2022 3:58:47 PM (IST)எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர்.

சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி வருகை தந்துள்ளனர். வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வத்திடம் அண்ணாமலை மற்றும் சிடி ரவி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அண்ணாமலை மற்றும் சிடி ரவி சென்றிருந்தனர். ஜனதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமியிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory