» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்
வியாழன் 23, ஜூன் 2022 3:48:34 PM (IST)
கடலூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். 3பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் அருகே கோப்பர்குவாரி மலை பகுதியில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்களும் கூலிக்கு பட்டாசு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டாசு தயாரிருக்கும் ஒரு குடோன் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தரை மட்டமானது. அதில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சித்ரா(35), அம்பிகா(50), சத்தியராஜ்(34) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜி, வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அப்போது வெடி வாங்க வந்திருந்த வெள்ளக்கரை பகுதியை சேர்ந்த வைத்தியலிங்கம் (37) என்பவரும் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த கடலூர் திருப்பாதிரிபுலீயூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயன்பாடின்றி கிடப்பில் மருத்துவ உபகரணங்கள் : எம்எல்ஏ., ஆய்வு
புதன் 29, ஜூன் 2022 6:24:56 PM (IST)

திருப்பதி கோவில் போல் பழனி கோவிலை தரம் உயர்த்த முடிவு
புதன் 29, ஜூன் 2022 6:14:01 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 29, ஜூன் 2022 5:50:58 PM (IST)

நடிகை மீனா கணவர் மறைவு : திரைப்பிரபலங்கள் இறுதிஅஞ்சலி
புதன் 29, ஜூன் 2022 5:35:29 PM (IST)

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் : ஆளுநருக்கு அன்புமணி வேண்டுகோள்!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:38:34 PM (IST)

அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:30:37 PM (IST)
