» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பொதுக் குழுவிலிருந்து பாதியிலேயே வெளியேறினார் ஓ. பன்னீர்செல்வம்!

வியாழன் 23, ஜூன் 2022 12:22:43 PM (IST)

அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்திருந்த நிலையில்,கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்.

சென்னையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும், ஓ.பன்னீர் செல்வம் துரோகி, அவர் வெளியேற வேண்டும் என பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். மேலும், இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைஅச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் கேட்டு கொண்டனர். இந்நிலையில், சட்டத்துக்கு புறம்பான பொதுக் குழு என்று முழங்கியவாறு, ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கமும் கூட்டத்திலிருந்து புறப்பட்டார்.


மக்கள் கருத்து

tamilanJun 23, 2022 - 07:05:35 PM | Posted IP 162.1*****

மொத்தத்தில் அதிமுக சிதறுவதோடு மட்டுமில்லாமல் அரசியல் செல்வாக்கை இழக்கிறது

RAMAJun 23, 2022 - 01:55:42 PM | Posted IP 162.1*****

இனிமேல் அதிமுகவுக்கு நல்ல காலம். டயர் கும்பிடு சாமி வெளியேறிவிட்டார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory