» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஸ், வேன்கள், கார் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 8 பேர் காயம்

புதன் 19, ஜனவரி 2022 9:38:58 PM (IST)

நெல்லையில் பஸ், வேன்கள், கார் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில்  7 பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த மேல முன்னீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வேல் ராஜ். இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறுகால் தலையில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு செல்வதற்காக இரண்டு வேன்களில் ஏறிக் கொண்டிருந்தனர். 2 வேன்களும் சாலையோரம் நிறுத்தப்பட்டு அதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஏறிக் கொண்டிருந்தனர்.

அப்போது அம்பையில் இருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பஸ், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு வேனின் பின் பகுதியில் மோதியது. இதில் 2 வேன்கள் ஒன்றோடு ஒன்று மோதி, எதிரே வந்த கார் மீது மோதி யது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது.இதில் வேனில் ஏறி அமர்ந்திருந்த 7 பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்களை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory