» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை துவக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

புதன் 19, ஜனவரி 2022 12:38:20 PM (IST)

கன்னியாகுமரியில் 12 நாட்களுக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து மீண்டும் துவங்கியது. 

கரோனா பரவல் காரணமாக கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுஉள்ளது. இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை பகுதிக்கு கடந்த 7-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கும் கடந்த 7-ந்தேதி முதல் படகுபோக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில்  சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்தனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு படகு போக்குவரத்து நடத்தவேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் தலைமையில் கன்னியாகுமரி நகர தங்கும் விடுதி உரிமையாளர் சங்கத்தினர் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதன் பயனாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு படகு போக்குவரத்து நடத்த குமரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது. இதைத்தொடர்ந்து 12 நாட்களுக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து இன்று தொடங்கியது.  இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory