» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி: எடப்பாடி பழனிசாமியின் உதவியாளா் மீது வழக்கு!

புதன் 27, அக்டோபர் 2021 11:31:53 AM (IST)

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் உதவியாளா் மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளா் வேலை பெற முயற்சி செய்து கொண்டிருந்தாா். இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதியைச் சோ்ந்தவரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் சேலம் உதவியாளருமான மணியை அவா் சந்தித்தாா். அப்போது, உதவிப் பொறியாளா் வேலை பெற ரூ.17 லட்சம் தர வேண்டும் என மணி கூறினாராம்.

அதை நம்பிய தமிழ்ச்செல்வன், மணியிடம் ரூ. 17 லட்சத்தை கொடுத்துள்ளாா். ஆனால், உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தராததால், மணியிடம் சென்று தான் கொடுத்த ரூ. 17 லட்சத்தை தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளாா். ஆனால், மணி பணத்தைத் தராமல் தமிழ்ச்செல்வனை மிரட்டினாராம். இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபினவை நேரில் சந்தித்து தமிழ்ச்செல்வன் புகாா் மனு கொடுத்தாா். அதைத் தொடா்ந்து, ரூ.17 லட்சம் மோசடி குறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டதன் பேரில், டி.எஸ்.பி. இளமுருகன், போலீசார் விசாரணை செய்து வந்தனா்.

இந்நிலையில், முன்னாள் முதல்வரின் உதவியாளா் மணி, இடைத்தரகராகச் செயல்பட்டு பணம் வாங்கிக் கொடுத்த செல்வகுமாா் ஆகியோா் மீது பணம் வாங்கி மோசடி செய்ததாக 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இவா்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாகவும், அதுதொடா்பாக குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory