» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கார் விபத்தில் தோழி பலி: நடிகை யாஷிகா படுகாயம் - 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஞாயிறு 25, ஜூலை 2021 5:03:20 PM (IST)

கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

அட்மின்Jul 27, 2021 - 04:16:22 PM | Posted IP 103.1*****

பிடிச்சு உள்ள போடுங்கய்யா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory