» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல் மெலிந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்உதவி!!

ஞாயிறு 25, ஜூலை 2021 4:43:39 PM (IST)



தவறுதலாக பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல் மெலிந்த  சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 5 வயது சிறுமி இசக்கியம்மாள். இவர் கடந்த மார்ச் மாதம் தவறுதலாக பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டதால் உணவுக் குழாய் பாதிப்பு, உடல் எடை இழப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். அங்கு உள்ள அரசு மருத்துவர்களின் பரிந்துரைப்படி, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு நேற்று வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிகிச்சை பெறும் சிறுமியிடம் நலம் விசாரித்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சிறுமி 14 கிலோ எடையுடன் ஆரோக்கியமாகவே இருந்துள்ளார். தவறுதலாக பிளீச்சிங் பவுடரை சாப்பிட்ட பிறகு, திடீரென உடல் மெலிந்து 6 கிலோவாக குறைந்தது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். 

திரவ உணவு கொடுப்பதற்காக சிறுமியின் வயிற்றில் சிறு துளைக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் சிறுமிக்கு உணவு கொடுக்கப்படுகிறது. அவர் இன்னும் ஒரு மாதத்துக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டி உள்ளது. சிறுமியின் தாயும், தந்தையும் தங்க எனக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை அவர்களுக்கு கொடுத்துள்ளேன். சிறுமிக்கு சிகிச்சை முடியும் வரை அவர்கள் எனக்கு வழங்கப்பட்ட வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory