» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
45 வயதை கடந்தவர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
வியாழன் 8, ஏப்ரல் 2021 3:37:15 PM (IST)
தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது. இந்நிலையில் நேற்று தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமைச்செயலகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, பல்வேறு அரசு துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தொழில்துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம்,பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பி.உமாநாத், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் டி.ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமர் இன்று மேற்கொள்ளும் ஆலோசனையில், தமிழக அரசின் சார்பில் என்னென்ன கருத்துகளை முன்வைக்க வேண்டும்? என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தபால் வாக்கு பெட்டிகளை மே 1ஆம் தேதி திறக்க கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:50:02 PM (IST)

தவறான சிகிச்சை காரணமாக ரூ. 1 கோடி இழப்பீடு கோரும் நடிகை ரைசா வில்சன்
வியாழன் 22, ஏப்ரல் 2021 3:30:46 PM (IST)

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் : ஆட்சியர் அறிவிப்பு
வியாழன் 22, ஏப்ரல் 2021 3:09:28 PM (IST)

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுக் கொண்டார்!
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:43:39 PM (IST)

ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:31:05 PM (IST)

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி - மத்திய அரசுக்கு தினகரன் கண்டனம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:13:35 PM (IST)
