» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் : வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து ஏமாற்றிய கும்பல்

புதன் 7, ஏப்ரல் 2021 5:40:01 PM (IST)

கும்பகோணத்தில் ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதற்கிடையில், தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், ஒருசில இடங்களில் பணத்திற்கு பதிலாக டோக்கன் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கும்பல் ஒன்று ஓட்டுக்கு 2,000 ரூபாய் என்ற டோக்கன் வழங்கிவிட்டு ஏமாற்றி சென்றுள்ளது.

நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் வாக்களிப்பதற்காக 2,000 ரூபாய் டோக்கன்களை கொடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி இன்று கும்பகோணம் பெரியகடை வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய மக்கள் மளிகை கடைக்கு இன்று சென்று டோக்கன்களை கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மளிகைகடை உரிமையாளர் இந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடுத்துக்கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து

ஆமாApr 9, 2021 - 08:07:01 AM | Posted IP 173.2*****

ammk 20 ரூபாய் டோக்கன் பயலுக எல்லாம் திருடர்கள் குரூப்ஸ் ..

adminApr 8, 2021 - 09:54:24 PM | Posted IP 103.1*****

all ammk boys than.

போதும் திமுக போதும் அதிமுகApr 8, 2021 - 10:43:30 AM | Posted IP 162.1*****

திருட்டு திராவிட குரூப்ஸ் , எப்படியெல்லாம் மக்களை பயன்படுத்தி ஏமாற்றுவார்கள்

அசோக் குமார்Apr 7, 2021 - 06:32:28 PM | Posted IP 173.2*****

வேட்பாளர் க்கு பெயர் இல்லையா ???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products


Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory