» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின்: அதிமுக புகார்

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 5:10:40 PM (IST)திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுகவின் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.

திமுக-வின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திமுக-விற்கு வாக்குசேகரித்தார். உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் உதயசூரியன் பொறித்த சட்டையை அணிந்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது அவ்வாறு செய்தார். இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், அவருக்குரிய வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார்.

அப்போது உதயசூரியன் பொறித்த சட்டை அணிந்திருந்தார். தேர்தல் விதிமுறைப்படி அவ்வாறு செய்யக்கூடாது. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அதிமுக-வின் பாபு முருகவேல் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மை தமிழன் விவசாயிApr 8, 2021 - 10:48:50 AM | Posted IP 162.1*****

திமுக , அதிமுக மாறி மாறி கொஞ்சம் ஓரமாய் பொய் சண்டை போடவும், மானமுள்ள தமிழர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

kumarApr 7, 2021 - 01:12:20 PM | Posted IP 162.1*****

ivanuga ennaiku sattatha mathithanunga...ethirkatchiyaga irukumpothe ippadi arajagam...

ராமநாதபூபதிApr 7, 2021 - 09:49:33 AM | Posted IP 162.1*****

இவங்க செஞ்சா மட்டும் உடனே நொட்டிரனும். 2014ல் மோடி வாக்குச்சாவடிக்கு எப்படி வாக்களிக்க போனாருன்னு இந்தியாவுக்கே தெரியும். நேத்து குஷ்பு எப்படி போனா? வானதி சீனிவாசன் எப்படி போனா? அதெல்லாம் கேக்க வக்கு இல்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Thalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory