» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுவன் சித்ரவதை : வாலிபருக்கு வலைவீச்சு

புதன் 3, மார்ச் 2021 8:35:03 AM (IST)

பணகுடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுவனை சித்ரவதை செய்ததாக, வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடியை சேர்ந்தவர் வெள்ளச்சாமி (26). இவருக்கும், பணகுடியை அடுத்த சண்முகபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு ெசன்ற பிறகு வெள்ளச்சாமி கள்ளக்காதலியை சந்தித்து வந்துள்ளார். அப்படி அவர் வரும் போதெல்லாம் கள்ளக்காதலியின் 5 வயது மகன் வீட்டில் இருந்துள்ளான்.

அவன் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், வெள்ளச்சாமி அந்த சிறுவனை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் சண்முகபுரம் வந்து நேரில் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுவனை வெள்ளச்சாமி சித்ரவதை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நலப்பிரிவினர், பணகுடி காவல் நிலையத்தில் வெள்ளச்சாமி மீது புகார் செய்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து வெள்ளச்சாமியை வலைவீசி தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Nalam Pasumaiyagam


Thalir Products


Black Forest Cakes



Thoothukudi Business Directory