» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மதிய உணவு திட்டம் தொடக்கம்: ஆளுநர் தமிழிசை ஆய்வு

செவ்வாய் 2, மார்ச் 2021 4:12:23 PM (IST)புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள மதிய உணவு திட்டத்தினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கரோனா பொது முடக்கத்தால், அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவு நிறுத்தப்பட்டது.இதனையடுத்து நீண்ட இடைவெளி விடப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு பள்ளிகளில் மதிய உணவு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுத்தார். இதன்படி இன்று முதல் அரசுப்பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி,  மகேஸ்வரி ஆகியோருடன் நேரில் சென்று, புதுவை அருகே கலிதீர்த்தாள் குப்பம் அரசு மேனிலைப் பள்ளியில் மதிய உணவு வழங்குவதை பார்வையிட்டனர். அப்போது மதிய உணவை வாங்கி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சாப்பிட்டுப் பார்த்து தரத்தையும் ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Thalir Products
Nalam PasumaiyagamThoothukudi Business Directory