» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்

செவ்வாய் 2, மார்ச் 2021 3:56:38 PM (IST)



சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

அவரைத்தொடர்ந்து  துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thalir Products





Thoothukudi Business Directory