» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ல் இடைத்தேர்தல் : சுநீல் அரோரா அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:39:20 PM (IST)
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.வசந்த குமார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி கரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய கோளாறுகளால் மரணம் அடைந்தார். அவரது மறைவால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது. அந்த தொகுதிக்கும் தமிழக சட்டசபை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தொகுதியில வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 12-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு மார்ச் 19-ம் தேதி கடைசி நாள் ஆகும்.வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20-ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 22-ம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தாலும், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்து மே மாதம் 2-ம் தேதிதான் இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு
கேரள மாநிலத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார். அதேபோல் மலப்புரம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் கிடந்த ரூ.58 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த இளம்பெண்ணுக்கு பாராட்டு
வியாழன் 22, ஏப்ரல் 2021 9:12:28 PM (IST)

தபால் வாக்கு பெட்டிகளை மே 1ஆம் தேதி திறக்க கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:50:02 PM (IST)

தவறான சிகிச்சை காரணமாக ரூ. 1 கோடி இழப்பீடு கோரும் நடிகை ரைசா வில்சன்
வியாழன் 22, ஏப்ரல் 2021 3:30:46 PM (IST)

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் : ஆட்சியர் அறிவிப்பு
வியாழன் 22, ஏப்ரல் 2021 3:09:28 PM (IST)

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுக் கொண்டார்!
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:43:39 PM (IST)

ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:31:05 PM (IST)
