» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் : மார்ச் 12 ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:24:02 PM (IST)

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று தேர்தல் ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மார்ச் 12 ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம். மார்ச் 19 கடைசி வேட்பு மனு தாக்கல். மார்ச் 20 வேட்புமனு பரிசீலனை . மார்ச் 22 வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள். மே 2 ஆம் தேதி தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும்

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம். தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வேட்பாளர் உடன் 4 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி. வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் தேர்தல் செலவு அதிக அளவில் நடைபெறும் என்பதால் முக்கியாமாக கருதப்படுகிறது. 

விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதுபற்றி விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும். ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் புதுச்சேரி தொகுதிக்கு ரூ.22லட்சம், மற்ற 4 மாநிலங்களில் ரூ.30.8லட்சம் தேர்தல் செலவு அனுமதி. 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. வாக்காளர்களின் பாதுகாப்பு தான் முக்கியமானதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது என தெரிவித்தார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thalir ProductsThoothukudi Business Directory