» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜம்மு காஷ்மீரில் திருப்பதி கோயில் கட்டும் பணி விரைவில் துவங்கும்: தேவஸ்தான தலைவர் தகவல்

புதன் 27, ஜனவரி 2021 5:35:06 PM (IST)ஜம்மு காஷ்மீரில் திருப்பதி கோயில் கட்டும் பணி விரைவில் நடைபெறும் என திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் உறுப்பினர் சேகர் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் சென்னை ஆலோசனை மையம் தலைவருமான சேகர் ரெட்டி ஆகியோர் கன்னியாகுமரி திருப்பதி தேவஸ்தானத்தின் நடைபெற்ற வருஷாபிஷேகத்தில் பங்கேற்ற பின்னர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் திருப்பதி கோவிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெங்கடாச்சலபதி கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான 10 ஏக்கர் நிலம் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு வழங்கியுள்ளது. விரைவில் அதற்கான கட்டுமான பணிகள் துவங்கும். இதேபோன்று ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 35 தேவஸ்தான கோவில்களுக்கு, திருப்பதி தேவஸ்தானம் மூலம் கோ பூஜைக்காக பசு மற்றும் கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழைகளுக்கு விரைவில் இலவச திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேவஸ்தானத்தில் நடக்கும் திருமணங்களுக்கு கோயில் மூலமாக இலவச தாலி வழங்கப்படும். திருமணம் நடத்த விரும்புவோர் 15 தினங்களுக்கு முன்னர் தேவஸ்தானத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர நிர்வாகம் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. இதில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோசாலை மற்றும் திருமண மண்டபம் அமைக்கப்படும். 

தற்போது தேவஸ்தான கோவிலில் உள்ள கொடிமரம் கடல் காற்றினால் அரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தங்க முலாம் பூச ஏற்பாடு செய்யப்படவுள்ளது. குமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் பக்தர்களின் கோரிக்கையின் படி பிரம்மாண்ட கருடாழ்வார் சிலை நிறுவப்படும். மேலும் கன்னியாகுமரி பகுதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மிகப்பெரிய அளவில் பக்தர்களின் வசதிக்காக கோவில் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆர்ச் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory