» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!!

புதன் 27, ஜனவரி 2021 4:43:28 PM (IST)நெல்லையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, இன்று விடுதலையான சசிகலாவை வரவேற்று திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா போஸ்டர் ஒட்டியிருந்தார். இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 

"கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் நடந்துகொண்டதாலும் சுப்ரமணிய ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்,  கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என்றும் அதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam Pasumaiyagam


Thalir ProductsThoothukudi Business Directory