» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜன. 31-ல் வைகை சிறப்பு ரயில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 27, ஜனவரி 2021 4:33:18 PM (IST)

ஜன. 31- (ஞாயிற்றுக்கிழமை) வைகை சிறப்பு ரயில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (31.01.2021) வண்டி எண் 02636/02635 மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். 

மேலும் ஞாயிற்றுக்கிழமை (31.01.2021) மட்டும் வண்டி எண் 02605 சென்னை - காரைக்குடி சிறப்பு ரயில், வண்டி எண் 06105 சென்னை - திருச்செந்தூர் சிறப்பு ரயில், வண்டி எண் 06101 சென்னை - கொல்லம் சிறப்பு ரயில், வண்டி எண் 02633 சென்னை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஆகியவை முறையே 90, 120, 70, 60 நிமிடங்கள் காலதாமதமாக சென்னை எழும்பூரில் இருந்து  புறப்படும் என  தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thalir Products





Thoothukudi Business Directory