» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: தினகரன்

புதன் 27, ஜனவரி 2021 12:43:55 PM (IST)

சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு - பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று (ஜன.27) விடுதலை செய்யப்பட்டார். அவரைக் காணச் சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும்.

நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது வரவேற்பு தமிழகத்தில் சிறப்பானதாக இருக்கும் என்று கூறினார்.ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலாவின் விடுதலையை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதிமுக - அமமுக இணையுமா என்ற கேள்விக்கு அரசியல் பேச விரும்பவில்லை என்றும், சசிகலா விடுதலையான மகிழ்ச்சியில் தற்போது இருப்பதாகவும் தினகரன் கூறினார்.


மக்கள் கருத்து

இவன்Jan 28, 2021 - 10:52:58 AM | Posted IP 173.2*****

டுபாக்கூர் எல்லாம் அரசியலில் இருக்கார்

சாமிJan 27, 2021 - 04:34:08 PM | Posted IP 173.2*****

siripalagu Singaram

NALLAVANJan 27, 2021 - 04:14:03 PM | Posted IP 162.1*****

நல்லா காமெடியா இருக்கே....

MASSJan 27, 2021 - 02:36:55 PM | Posted IP 108.1*****

SUPER SUPER

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Thalir Products

Nalam PasumaiyagamThoothukudi Business Directory