» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது : மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
செவ்வாய் 26, ஜனவரி 2021 10:31:37 PM (IST)
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்த சசிகலா நாளை விடுதலையாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 98% லிருந்து 97% ஆக குறைந்துள்ளது. சசிகலா சீராக உணவு உட்கொள்கிறார். உதவியுடன் நடக்கிறார். சசிகலாவுக்கு கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கும் ஒத்துழைக்கிறார். ரத்தத்தில் சர்க்கரை அளவு 178-ஆகவும், ஆக்சிஜன் அளவு 97-ஆகவும் குறைந்துள்ளது. சசிகலா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
புதன் 3, மார்ச் 2021 10:43:09 AM (IST)

பைக் மீது அரசு பஸ் மோதியதில் நண்பர்கள் இருவர் பலி: சங்கரன்கோவில் அருகே பரிதாபம்
புதன் 3, மார்ச் 2021 8:39:26 AM (IST)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுவன் சித்ரவதை : வாலிபருக்கு வலைவீச்சு
புதன் 3, மார்ச் 2021 8:35:03 AM (IST)

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ஹேமமாலினி 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்
செவ்வாய் 2, மார்ச் 2021 4:37:30 PM (IST)

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதி : ஒப்பந்தம் கையெழுத்தானது
செவ்வாய் 2, மார்ச் 2021 4:28:01 PM (IST)

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மதிய உணவு திட்டம் தொடக்கம்: ஆளுநர் தமிழிசை ஆய்வு
செவ்வாய் 2, மார்ச் 2021 4:12:23 PM (IST)
