» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவசாய சேவைகளைப் பாராட்டி 105 வயது பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது : கனிமொழி வாழ்த்து
செவ்வாய் 26, ஜனவரி 2021 12:16:14 PM (IST)

விவசாயத்தில் சேவைகளைப் பாராட்டி 105 வயது பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என கனிமொழி எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருது கிடைத்தது குறித்து பாப்பம்மாள் கூறியதாவது: மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்துக்கும், கோவை மாவட்டத்துக்கும் கிடைத்த பெருமை ஆகும். இந்த விருது கிடைத்ததற்கான காரணமே விவசாயம் தான். இதனால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களையும் எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருது கட்டாயம் ஊக்குவிப்பதாக அமையும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வயது மூப்பு காரணமாக நான் அளவான உணவே எடுத்துக் கொள்கிறேன். தினமும் காலையில் குளித்து விட்டு கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் தான் சாப்பிட்டு வருகிறேன். அந்த காலத்தில் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்ததால் உடம்பில் நோய்கள் வந்ததில்லை. அதனால் கிராமங்களில் மருத்துவமனைகளே இல்லாமல் இருந்தது. அதேபோல நம்முடைய வேலையை நாமே செய்து கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்.இவ்வாறு அவர் கூறினார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தற்போது சகோதரியின் மகள் பராமரிப்பில் உள்ளார்.
விவசாயத்தில் அவரது சேவைகளைப் பாராட்டி 105 வயது பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பத்ம விருதுகள் பெறவுள்ள சக தமிழர்களுக்கு எனது வாழ்த்துகள்! pic.twitter.com/nAVUk7tNVi
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 26, 2021
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது அரசு பஸ் மோதியதில் நண்பர்கள் இருவர் பலி: சங்கரன்கோவில் அருகே பரிதாபம்
புதன் 3, மார்ச் 2021 8:39:26 AM (IST)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுவன் சித்ரவதை : வாலிபருக்கு வலைவீச்சு
புதன் 3, மார்ச் 2021 8:35:03 AM (IST)

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ஹேமமாலினி 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்
செவ்வாய் 2, மார்ச் 2021 4:37:30 PM (IST)

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதி : ஒப்பந்தம் கையெழுத்தானது
செவ்வாய் 2, மார்ச் 2021 4:28:01 PM (IST)

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மதிய உணவு திட்டம் தொடக்கம்: ஆளுநர் தமிழிசை ஆய்வு
செவ்வாய் 2, மார்ச் 2021 4:12:23 PM (IST)

தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
செவ்வாய் 2, மார்ச் 2021 3:56:38 PM (IST)
