» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு: திரைப்பட இயக்குநா் பாலா நீதிமன்றத்தில் ஆஜா்

செவ்வாய் 26, ஜனவரி 2021 8:43:13 AM (IST)

அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இயக்குநா் பாலா நேற்று ஆஜராகி விளக்கமளித்தாா்.

நடிகா்கள் ஆா்யா, விஷால் நடிப்பில் இயக்குநா் பாலா இயக்கி 2011-இல் வெளியான திரைப்படம் அவன் இவன். இந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டி ஜமீன் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் குறித்து அவதூறான கருத்துகளும், காட்சிகளும் அமைக்கப்பட்டதாகக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீா்த்தபதியின் மகன் சங்கா் ஆத்மஜன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜன. 25-இல் நீதிமன்றத்தில் இயக்குநா் பாலா நேரில் ஆஜராகி மனுதாரரின் கேள்விகளுக்கு பதில் கூற குற்றவியல் நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, இயக்குநா் பாலா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிபதி காா்த்திகேயன் முன்பு நேற்று நேரில் ஆஜரானாா். அப்போது மனுதாரா் அளித்த புகாருக்கு நீதிபதியிடம் விளக்கமளித்தாா். இதையடுத்து வழக்கை பிப். 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.இயக்குநா் பாலா சாா்பில் வழக்கறிஞர் முகம்மது உசேன், நயினாா் முஹம்மது ஆகியோரும், மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ரமேஷும் ஆஜராகினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir Products


Black Forest Cakes


Thoothukudi Business Directory