» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அக்.1 முதல் அனுமதியா? முதலமைச்சர் விளக்கம்

செவ்வாய் 29, செப்டம்பர் 2020 1:52:34 PM (IST)

பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் அவர் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.7,800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில் வசதிகள் சிறப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு அதிகரிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்.

10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண அக்.1 முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பற்றி மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தியபிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Black Forest Cakes


Anbu Communications




Thoothukudi Business Directory