» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது; விரைவில் டிஸ்சார்ஜ்: மருத்துவமனை அறிக்கை

செவ்வாய் 29, செப்டம்பர் 2020 12:44:21 PM (IST)

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் கடந்த 22-ம் தேதி அவர் உடல்நல குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் விஜயகாந்துக்கு கரோனா அறிகுறியுடன் இருப்பது தெரிந்தது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல், சளி தொல்லை இருந்தது. இதையடுத்து அவர், கணவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ள அதே மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், விஜயகாந்த்துக்கு நோய் தொற்று அறிகுறி இல்லை என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதிப்புக்குள்ளான பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes



Anbu Communications





Thoothukudi Business Directory