» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த ஓபிஎஸ் : ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை!

செவ்வாய் 29, செப்டம்பர் 2020 12:29:51 PM (IST)

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் 8ஆவது முறையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. எனவே, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் இன்று (செப்டம்பர் 29) ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா அல்லது இந்த நிலையே தொடர்வதா என்பது குறித்தும், மாற்று வழிகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

வழக்கமாக கடந்த முறை நடந்த கூட்டங்களில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கட்டாயமாக கலந்துகொள்வர். ஆனால், இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளாதது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே நேருக்கு நேர் வாதம் நடந்தது. 

இந்த நிலையில்தான் இன்றைய மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் பன்னீர்செல்வம். அதே சமயம் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இன்று முக்கியமான ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முதல்வர் வேட்பாளர் விவகாரம் பற்றி இதில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory