» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 5:31:16 PM (IST)

தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிக அளவாகவே தொடர்வதால், மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. கரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், கரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம். 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் அரசு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தாலே கரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும். தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை  தற்போது குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மேலும், கரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை. ஆரம்ப கால அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory