» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் விவகாரம்: ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 5:22:18 PM (IST)

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு நிர்ணயித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory