» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொடிய நோயை தடுக்கும் மருத்துவ முறைகள் : ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் அருள்வாக்கு

வியாழன் 26, மார்ச் 2020 12:32:19 PM (IST)

கொடிய நோயை தடுக்க மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பல்வேறு மருத்துவ முறைகளை அருளியுள்ளார். 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மூலம் அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்டு அவதார தெய்வமாக விளங்கி வருகிறார். இந்த சித்தர்பீடத்தின் தனிச்சிறப்பே அன்னையின் அருவாக்கின் மூலம் பல்வேறு நோய்களுக்கும், நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு வருகிறது என்பது நிதர்சனமான உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். 

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி அமாவசை பவுர்ணமி ஆகிய தினங்களில் அன்னை ஆதிபராசக்தி அருள்திரு அடிகளார் மூலமாக எழுந்தருளி அருள்வாக்கு அளித்து வருகிறார். இதில் பயன்பெற்ற பக்தர்கள் இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அருள்வாக்கினை கேட்டு அதன் அடிப்படையில் நடந்து வருகின்றனர். குறிப்பாக பெரிய பெரிய மருத்துவர்கள் கூட அன்னையிடம் சென்று விளக்கம் கேட்டு மக்களுக்கு சேவை செய்கின்றனர். 

இதுதொடர்பாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியாகி உள்ள தகவல்கள்: வேப்பிலை மருந்தும் உண்டு, மாத்திரை மருந்தும் உண்டு என்று கூறும் அன்னை ஆதிபராசக்தி, வீட்டில் சமயலறையில் உள்ள சிலவற்றையே மருந்தாக எடுத்துக் கொள்ளச் செய்து அதன் மூலம் குணமாக்கி வருகிறார். தற்போது கரோனா வைரஸ்க்கு தமிழ் மருந்துகளான சுக்கு, மிளகு, திப்பிலி, புதினா இலை, மல்லி தழை, நாட்டுசக்கரை ஆகியவற்றை கலந்து காய்ச்சி காலை மாலை என இரு வேளை அருந்த வேண்டும் என்று அருள்வாக்கில் அருளியுள்ளார்கள். 

சுக்கு மிளகு, திப்பி ஆகிய மூன்றையும் கால் ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் நீரில் நன்றாக கொதிக்க வைத்து, அரை டம்ளர் அளவுக்கு வற்றிய பின்னர் இளஞ்சூடாக அதனை பருக வேண்டும்  என கடந்த 17.03.2020 அன்று அளித்த அருள்வாக்கில் அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அசுத்தமாக மாறிவரும் நிலையில் நீரை கொதிக்கவைத்து மண் பானையில் உற்றி வைத்து குடிக்கவேண்டும். பதப்படுத்திய உணவுகளை தவிர்க்கவேண்டும். வீட்டுக்குள் செல்லும் போதும் கைகால்களை சுத்தம் செய்தபின் தான் உள்ளே நுழையவேண்டும்.இன்றைய சூழலுக்கான நோய் எதிர்ப்புசக்தி தரும் உணவுகளான சிறுதானியக் கஞ்சி மற்றும் நீர் ஆகாரம் தினசரி அருந்தவேண்டும். எலுமிச்சை ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். கொள்ளுத் துவையல் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அருள்வாக்கு அருளியுள்ளார்கள். மேலும் இது தொடர்பான பல்வேறு தகவல்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் தெரிந்து கொள்ளலாம். 


மக்கள் கருத்து

S.sasideviMar 26, 2020 - 03:36:42 PM | Posted IP 173.2*****

உலக மக்களை காக்க வந்த கலியுகதெய்வம் நம் அம்மா. அம்மா அருளிய உணவு முறைகளை நாம் கடைபிடித்து இந்த வைரஸ் நம்மை பாதிக்காத வண்ணம் தற்காத்துக் கொள்வது நம் கடமை ஆகும் சக்தி.🙏🙏🙏.

ஓம் சக்தி இராமர் கண்ணன்Mar 26, 2020 - 02:05:39 PM | Posted IP 108.1*****

ஓம் சக்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory