» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டெல்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் : ரஜினி பரபரப்பு பேச்சு

புதன் 26, பிப்ரவரி 2020 8:07:28 PM (IST)

டெல்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் வாயிலில் பத்திரிகையாளர்ளை இன்று மாலை நடிகர்  ரஜினி  சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் நடைபெற்ற வன்முறைச்  சம்பவங்கள் என்பது மத்திய உளவுத்துறையின் தோல்வி. இதற்காக மத்திய அரசை நான் கண்டிக்கிறேன்.இந்தப் போராட்டங்களை ஆரம்பத்திலேயே அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த சிஏஏ  சட்டத்தை எனக்குத் தெரிந்த வரை இந்த அரசு வாபஸ் வாங்கப் போவது இல்லை. இதைச் சொல்வதால் நான் பாஜகவின் ஊதுகுழல்; என் பின்னால் பாஜக இருக்கிறது என்று சொல்வார்கள்.  ஆனால் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில மூத்த அரசியல் விமர்சகர்களே அவ்வாறு பேசுவது வருத்தமாக உள்ளது.  நான் எப்போதும் எனக்குத் தெரிந்த உண்மையையே சொல்கிறேன். எந்தப் போராட்டமும் அமைதி வழியில் நடைபெறலாம். ஆனால் அந்தப் போராட்டம் வன்முறை ஆகக் கூடாது.வன்முறையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜிநாமா செய்யுங்கள் .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory