» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்க்கரை நோய் பாதிப்பு 300 சதவீதம் அதிகரிப்பு அதிர்ச்சியளிக்கிறது : ராமதாஸ

புதன் 26, பிப்ரவரி 2020 3:54:56 PM (IST)

தமிழகத்தின் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் 300% அதிகரித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஊரகப் பகுதிகளில் சர்க்கரை நோயின் தாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 25 கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சர்க்கரை நோய் பாதிப்பு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. 

இந்நிலையில், அதுதொடர்பான ஆய்வறிக்கை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது, தமிழக கிராமப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு 300 சதவீதம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் மோகன் தெரிவித்தார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டரில், தமிழகத்தின் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் கடந்த 15 ஆண்டுகளில் 300% அதிகரித்து இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது மிகவும்  அதிர்ச்சியளிக்கிறது. நகரங்களைப்  போல கிராமங்களிலும் வாழ்க்கை முறை மாறியிருப்பது தான் இதற்கு முக்கியக் காரணம் என்பது கசப்பான உண்மை!

நீரிழிவு நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை ஆகும். நீரிழிவு நோயின் பாதிப்புகள், அதை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள், யோகா ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications



Thoothukudi Business Directory