» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக 80வது அவதாரத் திருநாள்: திருக்கல்யாண முத்து விழா!!

புதன் 26, பிப்ரவரி 2020 3:21:41 PM (IST)மேல்மருவத்தூர் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் 80வது அவதாரத் திருநாள் சதாபிஷேக திருக்கல்யாண முத்து விழாவில் அமைச்சர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் 80வது அவதாரத் திருநாள் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும், நலத்திட்ட உதவிகளும் ஒரு மாத காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. இன்று (26ஆம் தேதி) பங்காரு அடிகளாருக்கும் லட்சுமி பங்காரு அடிகளாருக்கும் சதாபிஷேக திருக்கல்யாணம் மேல்மருவத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சித்தர்பீடம் முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கருவறை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 3 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிடேகம் நடைபெற்றது. காலை 5.00 மணிக்கு திருமாங்கல்ய பூஜையும், சதாபிஷேக வேள்வியும் நடைபெற்றது. வேள்வி பூஜையில் குருமேடை குரு வேள்விகுண்டம், மேரு, உடலெங்கும் சங்கு கொண்ட ஐந்து தலை நாகச்சக்கரம,; ஒன்றை ஒன்று ஒட்டியபடி தேனடை போன்ற தோற்றம் கொண்ட அறுக்கோண வேள்விகுண்டம் ஆகியன அமைக்கபட்டிருந்தது. பூஜையில் இலட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அடிகளாரின் திருக்குடும்பத்தின் மகளிர்களும் கலந்து கொண்டனர்.

காலை 9.05 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சித்தர்பீடத்திற்கு ஆன்மிககுரு பங்காரு அடிகளார், மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகிய இருவரும் வருகை புரிந்தனர். பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற சதாபிஷேக திருக்கல்யாண நிகழ்சியில் பங்காரு அடிகளார் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். விழாவில் பல்வேறு நாட்டிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணித்தலைவர் எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. டீக்காராமன், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன், உறுப்பினர் வழக்கறிஞர் சங்கர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலர் கே.டி. ராகவன். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைவர் மகேஸ்வரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள, திரை உலக பிரமுகர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். மேலும் விழா ஏற்பாட்டினை அடிகளாரின் திருக்குடும்பத்தினர் கோ.ப.அன்பழகன், அ.ஆஷாராணி அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீலேகா செந்தில்குமார், ரமேஷ், ப.ஸ்ரீதேவிரமேஷ், ப.ஜெய்கணேஷ், ப.உமாதேவி ஜெய்கணேஷ் மற்றும் பேரக்குழந்தைகள். சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory