» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என கூறவில்லை : முரளிதர் ராவ் விளக்கம்

வெள்ளி 8, நவம்பர் 2019 5:09:47 PM (IST)

ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என கூறவில்லை என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, திருவள்ளுவரின் படைப்புகளில் ஆத்திகம் உள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை திமுக மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. திருவள்ளுவருக்கு விபூதி பூசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என திமுக கூறுகிறதா? திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே பொதுவானது. தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சித் தேர்தல். அதை எதிர்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம். ரஜினிகாந்த் பாஜகவில் சேரவுள்ளார் என நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை" என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory