» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது : ரஜினி கருத்துக்கு துரைமுருகன் பதிலடி!!

வெள்ளி 8, நவம்பர் 2019 3:50:05 PM (IST)

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.  அவரது கருத்துக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம், தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது.  தொடர்ந்து அரசியல் பயணத்தில் இல்லாததால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory