» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டாலின் மிசாவில் கைதானதற்கான குறிப்புகள் எங்கும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

வெள்ளி 8, நவம்பர் 2019 11:02:38 AM (IST)

திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதானதற்கான குறிப்புகள் எங்கும் இல்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அமைச்சர் பாண்டியராஜனை எதிர்த்து, திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்," என விமர்சித்திருந்தார்.

ஸ்டாலினின் விமர்சனத்துக்குப் பதில் தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று (நவ.8) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மிசா குறித்து அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் மு.க.ஸ்டாலின் பெயர் இல்லை. இரா.செழியன் எழுதிய புத்தகத்தில் ஸ்டாலின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. அவரது பெயர் இஸ்மாயில் கமிஷனிலும் கிடையாது. ஷா கமிஷனிலும் கிடையாது. இரா.செழியன் எம்.பி.யாக இருந்த காலத்தில், மிசா காலக் கொடுமைகள் குறித்து எழுதிய புத்தகத்தில், ஸ்டாலின் கைதானதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை" எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

MASSNov 8, 2019 - 03:33:18 PM | Posted IP 162.1*****

அய்யா நீங்க அரசியலுக்கே வரவில்லை . சின்ன ............?

ராமநாதபூபதிNov 8, 2019 - 11:09:15 AM | Posted IP 108.1*****

உங்க நேரம் டே இப்போ பேசுறீங்க. இதே மிசா காலத்தில் நீங்கள் எல்லாம் எங்கே ஒளிந்து இருந்தீர்கள் என்பது உங்க கட்சி தலைவனுக்கே தெரியாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory