» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்தது: வாடிக்கையாளர்கள் குவிந்தனர்!!

வெள்ளி 8, நவம்பர் 2019 10:18:35 AM (IST)

சேலம் அருகே எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் குஷியில் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர். 

சேலம் மாவட்டம், ஓமலூர் பண்ணப்பட்டியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இருந்து ரூ.200க்கு பதில் ரூ.500 வந்துள்ளது. இதனால் குஷி அடைந்த வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணம் எடுத்துள்ளனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் பணம் மாறி வந்த ஏடிஎம் மையத்திற்கு பூட்டு போட்டனர். ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைக்கப்பட்டதே பணம் மாறி வந்ததற்கான காரணம் என்றும், பணத்தை மாற்றி வைத்த தனியார் நிறுவனமே பண இழப்புக்கு பொறுப்பு என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

ஒருவன்Nov 9, 2019 - 04:31:06 PM | Posted IP 162.1*****

தனியார் நிறுவனமே, மக்களோ , யாரோ ... பண இழப்புக்கு பொறுப்பு அல்ல .. SBI வங்கி யின் மெஷின் தான் பொறுப்பு

அருண்Nov 9, 2019 - 01:43:16 PM | Posted IP 157.5*****

காசுதான் சார் எல்லாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes

Thoothukudi Business Directory