» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் ஆதரிப்பேன்: நடிகர் ராதாரவி பேச்சு

புதன் 9, அக்டோபர் 2019 12:37:15 PM (IST)

ரஜினி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அவர் பின்னால் நான் நிற்கத் தயார் என நடிகரும் அதிமுகவின் முக்கிய பிரமுகருமான ராதாரவி பேசினார்.

முன்னாள் மேயரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் விழாவில் அதிமுக பிரமுகர் நடிகர் ராதாரவி பேசினார். அப்போது அவர் ரஜினி குறித்தும், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் பின்னால் நிற்கத் தயார் என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் ராதாரவி பேசியதாவது: கராத்தே தியாகராஜன் என்றால் நட்பு என்று அர்த்தம். எந்த ஒரு விஷயம் என்றாலும் ஓடிவந்து உதவுவார். எனது தாயார் மரணம், சரத்குமார் அண்ணன் மரணம் உள்ளிட்ட பல விஷயங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர் எங்கே இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டார்.  யார் அழைத்தாலும் ஓடிவந்து உதவுவார்.

மேடையில் எஸ்.வி.சேகர் உள்ளார். நாங்கள் எல்லோரும் நட்பாக இருப்பவர்கள். நட்பாக இருப்பவர்கள் என்றால் எதிர்காலத்தில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இருப்போம் என்று நினைக்கிறேன்.ரஜினி வருங்காலத்தில் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் நான் அவர் பின்னால் நிற்கத் தயார். என்னங்க நீங்க அவர் பின்னாடி நிற்கிறேன் என்கிறீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். ஆமாய்யா? ரஜினி பாஜக. அப்புறம் அதிமுக கூட்டணிதானே. அப்படி என்றால் சரிதானே என்றேன். அவர் முதலமைச்சர் பொறுப்புக்கு  நிற்கிறார் என்றால் தொடை நடுங்குகிறவர்கள் இடம் வேறு.

சகோதரர் ராஜசேகரிடம் பேசும்போது சொன்னேன். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று சொன்னேன். அவர் எப்படி வெல்வீர்கள் என்று கேட்டார். ஜெயிப்போம் அவ்வளவுதான். ஏனென்றால் பவர் இருக்கவேண்டும். மனிதாபிமானம் இருக்கவேண்டும். எதிர்க்கிற சக்தி வேண்டும். இது எல்லாம் இருந்தால் வெற்றி நிச்சயம். இவை எல்லாம் இணைந்துள்ளது. ஏனென்றால் வலுவான சக்தி ஒன்று சேரும்போது வலுவற்ற சக்தி தோற்கும். உடனே எல்லோரும் சொல்வார்கள். இவர் அவரைப் பற்றித்தான் பேசுகிறார் என்று. இணையதளத்தில் போட்டுவிடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். நான் அவரைப் பற்றித்தான் பேசினேன். நானெல்லாம் மன்னிப்பு கேட்கிற ரகம் கிடையாது.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கராத்தே தியாகராஜன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நானும் அதை நம்பிச் சொல்கிறேன். அவர் வந்தால் நானும் உடன் வருவேன் என்று. ரஜினி சடக்கென்று பேசி ஒரு முடிவை எடுக்கமாட்டார். யோசிச்சுத்தான் எடுப்பார். ஆனால் இந்த முறை முடிவெடுப்பார். சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் கராத்தே தியாகராஜன் இந்த டிவிஷன் வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்டு வாங்கினார். அவ்வளவு நம்பிக்கை உள்ளவர் கராத்தே தியாகராஜன். இவ்வாறு ராதாரவி பேசினார்.


மக்கள் கருத்து

இவன்Oct 10, 2019 - 10:01:37 AM | Posted IP 108.1*****

2 பேர் தமிழர்கள் போட்ட பிச்சை காசுல வாழும் கூத்தாடிகள் கூட்டம்

ராஜாOct 9, 2019 - 03:17:13 PM | Posted IP 162.1*****

ஆமாம் ஸ்டாலின் ஒரு தெலுங்கன் அவரையும் ஆட்சி அமைக்க விடக்கூடாது

ராமநாதபூபதிOct 9, 2019 - 02:44:45 PM | Posted IP 162.1*****

கௌண்டமணி சொன்னது போல பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே என்பது போலத்தான் உள்ளது ராதாரவி பேச்சு

தமிழ்ச்செல்வன்Oct 9, 2019 - 12:53:33 PM | Posted IP 162.1*****

தெலுங்கனும் கன்னடனும் ஒண்ணு சேர்ந்து தமிழன் தலையில் மொளகா அரைக்க போறீங்களாடா? ஒரு நாளும் நடக்காது!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory