» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

செவ்வாய் 8, அக்டோபர் 2019 5:35:27 PM (IST)



பூம் பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை மறந்து விடக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு அமைந்துள்ள வீதியில் பூம் பூம் மாட்டுக்காரர் சென்று கொண்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார், வீட்டை விட்டு வெளியில் வந்து பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார். பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன் என்று கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் தன்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பூம் பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை மறந்து விடக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிOct 9, 2019 - 09:55:16 AM | Posted IP 162.1*****

மாடு தலையை நக்கியதால் இனி முடி வளரும் என்று எதிர்பார்க்கலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory