» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : தமிழக கமாண்டோ படையினர் கோவை வருகை

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 5:52:45 PM (IST)

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழக கமாண்டோ படையினர் கோவை வந்துள்ளனர்.

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு, மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.  இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழக கமாண்டோ படையினர் கோவை வந்துள்ளனர்.  அவர்கள் 10 குழுக்களாக பிரிந்து மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர். இதனிடையே ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹீர் என்பவரை நாகை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Black Forest Cakes



Anbu Communications



Thoothukudi Business Directory