» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காஷ்மீர் பிரச்னை மத்தியஅரசின் செயல் சட்டவிரோதம் : காதர்முகைதீன் குற்றச்சாட்டு

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 1:19:52 PM (IST)

காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசின் செயல் சட்ட விரோதமானது என பேராசிரியர் காதர்முகைதீன் குற்றம் சாட்டினார்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,   தமிழகத்தில் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காக அனைத்து ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதால் உரிய இடங்களை பெற்று சிறப்பாக போட்டியிடுவோம். தமிழகத்தை பொறுத்த வரையில் மாவட்டங்களை பிரிப்பது தொடர்கிறது .அதனை வரவேற்கிறோம். ஆனால் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை யோசித்து வளர்ச்சி கூடுவதற்கான வழி ஏற்படுத்த வேண்டும்.  காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் அரசியல் சட்டத்திற்கு முரண்பாடானது. காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மக்களின் உணர்வுகளை புறக்கணித்ததாகும். மக்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு மீறிவிட்டது. ஜனநாயக உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது, மக்களின் கருத்துகளையோ, ஆலோசனையை பெறாமல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்க கூடியது.

திமுக தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மிக முக்கியமானவை. மத்திய அரசு எடுத்த முடிவை ஒத்தி போட வேண்டும். நடைமுறைபடுத்த கூடாது. அனைத்து கட்சி தலைவர்களின் தூதுக் குழுவை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும். அங்கு மக்களின் கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்து அதன் பிறகு தான் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் பால் விற்பனையில் 1 லிட்டர் க்கு 6 ரூபாய் உயர்த்தியது அனைத்து வகையிலும் மக்களை பாதிக்கும் நிலையை கைவிட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கான், தலைமைக்கழக பேச்சாளர்தென்காசி முகமது அலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory