» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு திமுக ஆதரவு: பாஜக தலைவர் தமிழிசை குற்றச்சாட்டு!

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 12:40:44 PM (IST)

பாகிஸ்தான் மற்றும் திமுக மட்டுமே காஷ்மீர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. அதுமட்டுமின்றி அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து இது குறித்த மசோதா ஒன்றை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிய மத்திய அரசு, வரும் அக்டோபர் மாதம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் திட்டமிட்டுள்ளது

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டுமே எதிர்த்து வந்த நிலையில் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அதே போல் உலகின் பல நாடுகள் இந்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்த நிலையில் பாகிஸ்தான் மட்டுமே இந்த நடவடிக்கையை எதிர்த்து வருகிறது. மொத்தத்தில் பாகிஸ்தான் மற்றும் திமுக மட்டுமே காஷ்மீர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். 

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஏற்கனவே தேசிய தொலைக்காட்சி ஒன்றில் பேசிய திமுக பிரமுகர் ஒருவர் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று கூறிவிட்டு பின்னர் அவ்வாறு தான் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory