» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 11:45:49 AM (IST)"பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் குறித்து போலீஸ் விசாரணை தேவை" என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் அடிக்கடி சர்ச்சை உருவாகி வருகிறது. இதில் சமீபமாக பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் பரவியது. இதைப் பலரும் உண்மையா என்று ஆச்சரியத்துடன் பகிர்ந்து வந்தனர். உண்மையில் நடந்தது என்ன? என்பதை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பவே இல்லை. மாறாக, பிக் பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா வெளியே வந்து கமலுடன் கலந்துரையாடினார். அப்போது, மதுமிதாவின் மணிக்கட்டில் கட்டுப் போடப்பட்டு இருந்தது.

தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக கமல்ஹாசன், "நீங்கள் செய்த காரியம் அனைவருக்குமே ஏமாற்றத்தை அளித்துள்ளது. போட்டியாளர்களின் தைரியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சோதிப்பதே இந்தப் போட்டி. ஆனால், இந்தக் காயம் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணம் அல்ல" என்று மதுமிதாவைக் கண்டித்தார்.ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்று பலரும், பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், மதுமிதா இதுவரை எந்தவொரு காரணத்தையும் வெளிப்படுத்தவில்லை. இதனிடையே, நடிகை நளினியின் மகள் எழுதியது என்ற பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது.

அதில் பிக் பாஸ் வீட்டில் ஹலோ என்ற டாஸ்க் நடந்தது. அனைவருமே ஒற்றை வரியில் ஏதேனும் ஒரு தகவலைத் தெரிவிக்க வேண்டும். அப்போது மதுமிதா "வருண பகவான் கூட கர்நாடக காரரோ, கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே" என்று தெரிவித்துள்ளார். இதற்கு இதர போட்டியாளர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். இதனால் தான் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக நளினியின் மகள் எழுதியுள்ள பதிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாகப் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில், "மதுமிதா தற்கொலைக்கு முயன்றது தவறு எனக் கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்குத் தூண்டியவர் யார் எனக் கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா? ஏன் 60 கேமராவில் சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுதான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

நிஹாAug 19, 2019 - 05:35:03 PM | Posted IP 173.2*****

உங்கள் மீதான வழக்கு என்னவானது என்பதற்கு ஒரு விசாரணை வைக்க வேண்டும்.

ஏ கண்ணன்Aug 19, 2019 - 04:47:01 PM | Posted IP 162.1*****

நாட்டில் உள்ள பிரச்சனைகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவையா கமல் வேறு வழியில்லையே ஓ உங்களுக்கு பணம் சம்பாதிக்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDAnbu CommunicationsThoothukudi Business Directory